[Advaita-l] Joyous 59th Vardanthi of H.H. Bharathi Theertha Mahaswamigal
Mahadevan Babu
babunim at optushome.com.au
Thu Apr 2 04:50:05 CDT 2009
Dear Asthikas,
Sri Gurubyo Namaha !!!
I pray to the Lotus Feet of Jagadguru Sri Sri Sri Bharahti Theertha
Mahaswamigal to grace us all with the path to Shreyas.
1st April 2009 (Indian Time) / 2nd April 2009 (US Time) marks the 59th
Vardanthi (Birthday) of the Mahaswamigal.
On this joyous day, I wish to share with you the Akshara Mala that I
was able to submit on to his Lotus Feet in Tamil by the Grace of
Acharyal and Sharadambal.
Please excuse me that I have not yet translated & transliterated in
English.
அக்ஷரங்களில் அகாரமாய்
விளங்கிட்டு
அகிலலோகத்தின் சாக்ஷியாய்
திகழ்ந்திட்டு
அபிநவ வித்யாதீர்த்தரின்
நிழலாய் நின்றிட்டு
அன்பின் ரூபமான எங்கள்குரு
ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
ஆஸ்தீக தர்சனமாம் ஆறு
அவற்றின்
ஆற்றாய் பெருகிட்டு
அருள்வார்
ஆத்மஞானத்தை சுடர் விட்டு
ஆதார ரூபமான எங்கள்குரு
ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
இருமையற்ற இருப்பே உண்மை
இலாமையுடைய தோற்றமே மாயை
இத்தத்துவத்தை உலகுக்கு
போதித்து
இனிய ரூபமான எங்கள்குரு
ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
ஈடற்ற வித்தையின்
இருப்பிடமே
ஈர்த்திடும் மாயையெனும்
இருட்டினை
ஈட்டியெனும் ஞானத்தால்
தகர்த்திட்டு
ஈசனின் ரூபமான எங்கள்குரு
ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
உபநிடதச் சாரமான அத்வைத
உண்மையை உலகுக்கு
போதிக்கவே
உருவெடுத்த வித்யாதீர்த்த
சீடரே
உலககுரு எங்கள்குரு ஶ்ரீ
பாரதீ தீர்த்தரே !
ஊனாயினும் ஞான மூடாயினும்
ஊக்கமுடன் குருபக்தியுடன்
பணிய
ஊக்குவிக்குமே சாதன
சதுஷ்டயம்
ஊர்த்வ மூலமான எங்கள்குரு
ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
எவ்விடத்திலும் பூர்ணமாய்
நிறைந்து
எக்காலத்திலும் திடமாய்
நின்றிட்டு
எவ்வுயிரிலும் கருணையாய்
பரவிடும்
எம்பெருமான் ரூபமான
எங்கள்குரு ஶ்ரீ பாரதீ
தீர்த்தரே !
ஏகமான ப்ரும்மமே சத்தியம்
ஏனையால் ஏற்றதாழ்வு
எண்ணலாகாது
ஏற்றிருக்கும்
தெய்வரூபத்தில் என்று
ஏனையோர்க்கு போதித்த
எங்கள்குரு ஶ்ரீ பாரதீ
தீர்த்தரே !
ஐம்பொறிகளுக்கு எட்டாத
வஸ்துவாம்
ஐந்துறையினுள் புதைந்த
பொக்கிஷமாம்
ஐயன் குருவின் அருளாலே
அறியுமந்த
ஐயனான எங்கள்குரு ஶ்ரீ
பாரதீ தீர்த்தரே !
ஒலிக்கும் மறையின்
தத்துவமே
ஒளிக்கு ஒளியான ஞானரூபமே
ஒடுங்கும் எல்லாம்
சுத்தசைத்தன்யமே
ஒப்பில்லை உமக்கு
எங்கள்குரு ஶ்ரீ பாரதீ
தீர்த்தரே !
ஓங்கிடும் உண்மையின்
உறைவிடம்
ஓதிடும் மறைகளின் அந்தமாம்
ஓரான தத்துவத்தின் சாரமாம்
ஓங்கார ரூபமான எங்கள்குரு
ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
ஒன்றிட்டு குருவடியினில்
வீழ்ந்திட்டால்
ஔஷதமது அஞ்ஞானப்
பிணியினுக்கு
ஓடமது சம்சாரக்கடலை
கடப்பதற்க்கு
ஔதார்ய மூர்த்தியான
எங்கள்குரு ஶ்ரீ பாரதீ
தீர்த்தரே !
மஹாதேவன்
பாபு
Mahadevan Babu
babunim at optushome.com.au
More information about the Advaita-l mailing list