[Advaita-l] Free download of Tamil Book 'Jagadguruvin Sollamudam'

V Subrahmanian v.subrahmanian at gmail.com
Fri Mar 6 13:08:44 EST 2020


This is an announcement for Free download of a Tamil book containing
replies/clarifications to questions on sadhana, etc. given by HH Jagadguru
Sri Abhinava Vidyatirtha Mahasvamin, the 35th Pontiff of the Sringeri
Sharada Peetham.

இலவசப் பதிவிறக்கத்திற்குப் புதிய மின் புத்தகம்
“ஜகத்குருவின் சொல்லமுதம்”
மோட்சம் பெற விழையும் ஒருவனை வழிநடத்தக் குரு ஒருவர் தேவையா? ஞானமடைந்த குரு
ஒருவர் தனது சிஷ்யனை எவ்வாறு ஆன்மிக நெறியில் முன்னேறச் செய்கிறார்? தம்மைத்
தாமே குரு என்று கூறிக் கொள்ளும் தகுதியற்றவர்களால் வழிநடத்தப்படுவதை ஒருவன்
எவ்வாறு தவிர்ப்பது? இறைவன் உண்மையில் இருக்கிறானா? அவனை நேரில் தரிசிக்க
முடியுமா? கடவுள் பாரபட்சமற்றவன் என்றால் நல்லோர்கள் துன்பப்படுவதும் அநியாயம்
செய்பவர்கள் வளம் கொழிப்பதும் எப்படி? செல்வமிருந்தும் வசதிகளிருந்தும் நாம்
ஏன் சந்தோஷமாக இருப்பதில்லை? பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாம் நிம்மதியாக
இருப்பது எப்படி? நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் முன்னரே
தீர்மானிக்கப்பட்டவைகளா? விதியை வெல்ல முடியுமா? முடியுமெனில் அது எப்படி?
கோபத்தை நாம் எவ்வாறு திறம்படக் கட்டுப்படுத்துவது? நமக்குத் தீங்கு
நினைப்பவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது? தர்ம நெறியை உறுதியாகக்
கடைப்பிடிப்பது எப்படி? காலத்திற்கேற்றவாறு சாஸ்திரங்களை மாற்றியமைத்துக்
கொள்ளலாமா? கர்மயோகம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் யாவை? அதை எப்படி
பயிற்சிப்பது? நம்முள்ளிருக்கும் ஆத்மாவை நாம் எவ்வாறு உணர்ந்து கொள்வது?
‘உலகம் ஒரு கற்பனை’ என்ற வேதாந்த நிலைப்பாட்டை எவ்வகையில் புரிந்துகொள்வது?
அலைபாயும் மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது? நிர்விகல்ப ஸமாதி நிலையை எவ்வாறு
அடைவது?
ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35வது ஜகத்குரு சங்கராசார்யாள் ஸ்ரீ ஸ்ரீ
அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் அளித்துள்ள தெள்ளத் தெளிவான பதில்கள்,
அவருடனான உரையாடல்கள் வடிவிலும் அவரது விளக்கவுரைகள் மற்றும் கட்டுரைகளின்
வடிவிலும் “ஜகத்குருவின் சொல்லமுதம்” என்ற புத்தகத்தில் சுவையாகத்
தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் இப்புத்தகம், நன்னெறி, அத்வைத வேதாந்தம்
மேலும், பக்தி, ஆத்ம விசாரம், தியானம் ஆகியன உள்ளடங்கிய ஆன்மிகப் பயிற்சிகளைப்
பற்றிய தகவல்களின் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
“ஜகத்குருவின் சொல்லமுதம்” என்ற இப்புத்தகம் சென்னையைச் சேர்ந்த Centre for
Brahmavidya அறக்கட்டளையினால் சமீபத்தில் அச்சிடப்பட்டு, சிருங்கேரி ஜகத்குரு
ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் மற்றும் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர
பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் ஸன்னிதியில் பக்தி சிரத்தையுடன்
ஸமர்ப்பிக்கப்பட்டது.
இப்புத்தகத்தின் PDF மின்பதிப்பைக் கீழ்கண்ட இணைப்பின் மூலமாக இலவசமாகப்
பதிவிறக்கம் (Free Download) செய்துகொள்ளலாம்:

https://centreforbrahmavidya.org/Jagadguruvin-Sollamudam.pdf

புத்தகத்தின் அச்சுப் பிரதிகளை வாங்க அணுகவேண்டிய முகவரி:
L.Rajeshkumar
Timings: Week days - 10 am to 7 pm
Saturdays: 10am - 5pm
M M FORGINGS LIMITED
SVK Towers, A-25
Industrial Estate
Guindy -600 032
Mobile : 7338925814
Email: contact at centreforbrahmavidya.org

regards
subbu


More information about the Advaita-l mailing list