[Advaita-l] A Tamil article on the Advaitic import of a few lines of Subrahmanya Bharati
V Subrahmanian
v.subrahmanian at gmail.com
Fri Oct 11 06:34:52 EDT 2024
Here is a short article on the Advaitic flavour of a few lines of the great
Tamil poet Subrahmanya Bharati. Those who know Tamil can appreciate the
write up. As such, no English translation is provided.
பாரதியின் வரிகளில் அத்வைதம்
இந்த ஒரு கவிதையில் பாரதியார் 'பரம நிலை' என்ற முக்தியை அடைய உள்ளத்தில்
ப்ரம்மத்தைப் பாவிப்பது, ஆழ்ந்து அன்புடன் சிந்திப்பதுவே வழி எங்கிறார்:
காவித்துணி வேண்டா கற்றை சடை வேண்டா
*பாவித்தல் போதும் பரம நிலை எய்துதற்கே!*
சாத்திரங்கள் இல்லையொரு சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுளந் தொட்டு நின்றால் போதுமடா!
.
சங்கரர் ப்ரம்ம சூத்ர பாஷ்யத்தில் சொன்ன ஒரு மிகச் சிரிய வாக்கியம் பாரதியின்
கூற்றைப் பறை சாற்றுகிறது:
*ब्रह्मभावश्च मोक्षः । (ஸமன்வய சூத்ரம் 1.1.1.4)ப்ரம்ம பாவனையே மோக்ஷம். *
ப்ரம்மத்தைத் தான் என்று பாவிப்பதே முக்திக்கு வழி. ப்ரம்மம் நானே என்று
அறிந்து நிலைப்பதே முக்தி.
பாரதியின் அச்செய்யுளின் மற்ற வரிகளும் அத்வைத மணம் வீசுகின்றன -
*எங்கும் நிறைந்திருக்கும் ஈசவெள்ளம் என்னகத்தே பொங்குகின்ற என்றெண்ணி போற்றி
நின்றால் போதுமடா!*
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்புதென்று ஓதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!
*எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங்
கண்டவரே.*
இந்த வரிகளோ ப்ருஹதாரண்யக உபநிடதத்தின்
1.4.10 மந்திரக் கருத்தைத் தாங்கியுள்ளது காண்பீர்:
ब्रह्म वा इदमग्र आसीत्तदात्मानमेवावेत् । अहं ब्रह्मास्मीति ।
तस्मात्तत्सर्वमभवत्
சங்கரர் கூறிய பொருள்:
ப்ரம்மம் தன்னை 'அஹம் ப்ரமாஸ்மி' என்று அறியும் முன்பும் ப்ரம்மமாகத்தான்
இருந்தது. அது தன்னை அஹம் ப்ரம்மாஸ்மி என்று அறிந்து தனது சிறுத்த எண்னத்தை
விட்டு தான் எல்லாமுமாக இருப்பதை உணர்ந்தது.
இக்கருத்து பாரதியின் அந்த வரிகளில் காணக்கிடைக்கிறது.
ௐம்.
More information about the Advaita-l mailing list